SMS Backup+ செயல்பட வேண்டுமானால் நீங்கள் உங்கள் gmail inbox இல் உள்ள IMAP என்னும் அணுகலை செயல்படுத்த வேண்டும். இதை செயல்படுத்த உங்கள் கணிப்பொறி உலாவியில் (Browser) உங்கள் Gmail ஐ open செய்ய வேண்டும். பின்னர் அதன் மேல் வலது மூலையில் உள்ள settings என்னும் icon ஐ கிளிக் செய்து கிடைக்கும் drop drown menu box இல் settings என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்போது தெரியும் settings திரையில் Forwarding and POP/IMAP என்னும் tab ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் IMAP Access என்னும் menu வில் Enable IMAP என்னும் option button ஐ தேர்வு செய்ய வேண்டும். அதுபோல மேலும் உள்ள தேர்வுகளை கீழ் காணும் திரையில் உள்ளதுபோல அமைத்து அமைப்புகளை save செய்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நீங்கள் SMS Backup+ என்னும் application ஐ android ஸ்டாரே இல் இருந்து தரவிறக்கம் செய்து உங்கள் mobile phone இல் நிறுவிக் கொள்ளவும்.
SMS Backup+ என்பது ஒரு Configurable Application ஆகும். இதை எவ்வாறு configure செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். SMS Backup+ Application ஐ open செய்து கொள்ளவும். அதன் முதல் முக்கிய திரையில் Connect மற்றும் Auto Backup என்பனவற்றை டிக் செய்து கொள்ளவும். இதில் connect என்பதை கிளிக் செய்யும்போது அது நமது Gmail account உடன் இணையும். அதற்கான setting களை நாம் அமைத்து கொள்ள வேண்டும். அதுபோல ஆட்டோ backup என்பது ஓவொரு SMS மற்றும் Call Log ம் தானாகவே backup ஆகும். ஒருவேளை நாம் Auto backup என்பதை தேர்வு செய்யவில்லை என்றால் ஒவ்வொருமுறையும் நாமாக தான் backup செய்து கொள்ள வேண்டும்.
அதுபோல Auto Backup Settings இல் உள்ள Regular Schedule, Incoming Schedule, Required wifi மற்றும் 3rd Party integration போன்ற அமைப்புகளையும் நமது தேவைகேற்ப அமைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் Advanced Settings --> Backup Settings என்பதை தேர்வு செய்து அதில் வரும் அமைப்புகளையும் நமது வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் வழியாக நமது backup கள் நமது Gmail இல் ஒரு Folder ஆகவோ, அல்லது Subfolder ஆகவோ அமையுமாறு அமைத்துக் கொள்ளலாம்.
அதுபோல Restore Settings என்பதையும் நமது வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். அனைத்து setting களும் முடிந்தவுடன் backup process ஆனது கீழ் கண்ட திரையில் உள்ளது போல தொடங்கும். நமது mobile phone இல் அதிக SMS களும், Call Log களும் இருப்பின் அவற்றின் அளவிற்கேற்ப backup process அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இது முதன் முறையாக backup நடக்கும்போது மட்டும்தான்.
இந்த process முடிந்தவுடன் நமது Gmail ஐ open செய்து பார்த்தால் அதில் கீழ்கண்ட திரையில் உள்ளதுபோல Backup Folder கள் create ஆகி இருக்கும். அதற்குள் நமது Mobile phone இன் அனைத்து SMS களும், Call Log களும் Backup ஆகியிருக்கும்.







Post a Comment